Prof.Dhanapalan College of Science and Management

About Founder & Chairman

Founder

Our Founder Late Prof. R.V. Dhanapalan, B.A.,M.L,graduated in B.A. Economics from Government Arts College, Salem, and went on to do his M.A. Economics in Presidency College, Chennai. He graduated in Law from the Madras Law College and received his Masters in Law from the University of Madras. He started his career as an apprentice to Prof. N.A. Subramanian and proceeded to work as a junior under Justice S. Mohan who practiced in the Madras High Court for ten years. He later joined as Faculty of Law at Madras Law College and later served as a Senior Professor of Constitutional Law. Prof. R.V. Dhanapalan has to his credit, rich experience in the field of education by virtue of the various positions held by him. He was a member of the Academic Council, the Board of Studies, the Syndicate, the Senate and the Planning Commission of various universities. He was the special officer who formed and inaugurated the first law university of India, Dr. Ambedkar law university. Combining his professional excellence and personal achievements with social commitments, he desires to see the declared vision and mission transformed into a historic reality.

The heights gained by him bear testimony to his tireless efforts, indomitable will, and strong sense of commitment to his ideals and goals. His cherished conviction is a treasured legacy which will always continue to inspire and guide us. He was also the Advisor to the Governor of Tamil Nadu on Tamil Nadu University Education and the Vice-president of the Indian Institute of Public Administration, New Delhi, a premier National Institution of Excellence in Public Administration.

– நிறுவனர்‌
“உள்ளுவ தெல்லாம்‌ உயர்வுள்ளல்‌ மற்றது தள்ளினும்‌ தள்ளாமை நீர்த்து”

என்ற குறளுக்கேற்ப உயர்வான எண்ணத்தால்‌ கடினமான விடா முயற்சியால்‌ சிகரம்‌ “தொட்ட கல்வியாளரான நம்‌ கல்லூரி நிறுவனரும்‌ தலைவருமான பேராசிரியர்‌ . வி. தனபாலன்‌ அவர்கள்‌. இவர்‌ வழக்கறிஞராக இருந்து நீதியை நிலைநாட்டூவதில்‌ வல்லவராகவும்‌, பெற்ற அரசியலமைப்பு சட்டநிபுணராகவும்‌, சமூக சேவகராகவும்‌ திகழ்ந்தவர்‌. மெட்ராஸ்‌ சட்டக்‌ கல்லூரியில்‌ அரசியலமைப்பு சட்டத்தின்‌ பேராசிரியராக தனது பணியைத்‌ தொடங்கியவர்‌.

சென்னைப்  பல்கலைக்‌ கழகத்தின்‌ கல்விக்‌ கலந்தாய்வு ஆலோசனை சபை கவுன்சில் செனட் மற்றும் சிறப்பு அலுவலராகவும் விளங்கியவர். இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக் கழகமான டாக்டர் அம்பேத்கார் பல்கலைக் கழகம் உருவாகுவதற்குக் காரணமாக இருந்தவர். புதுடெல்லயில் உள்ள இந்திய நிறுவனத்தின் பொது நிர்வாக துணைத் தலைவராக இருந்தவர். பாராளுமன்றத்தின் சக உறுப்பினர் என்ற மதிப்பினையும் பெற்றவர். கல்வி நிறுவனங்களின் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்தவர். பல்கலைக் கழகங்களின் திட்டமிடுதல் குழுவின் உறுப்பினர் மற்றும் தரநிலை கற்பித்தலை மேம்படுத்துவதற்கான வாரிய ஆய்வுகளின் குழு தலைவராகவும் திகழ்ந்தவர். நுண்மான் நுழைபுலம் அறிந்த பன்முக ஆற்றல் வாய்ந்த தலைவராக விளங்கியவர்.

பெண்களுக்குக் கல்வியை வழங்கும் உன்னதமான பணிக்காக தனது புகழ்பெற்ற சட்டக் கல்லூரி பணியைத் துறந்தவர்.  “ஒவ்வொரு மனிதரும்‌ தனித்தன்மையுடன்‌ மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராகவே இருக்கிறார்‌. இதனால்‌ ஒவ்வொருவரும்‌ சிறப்பானவராக விளங்குகிறார்‌” என்ற புல்டன்‌ ஷீனின்‌ கருத்திற்கிணங்க வாழ்ந்தவர்‌ நம்‌ தலைவர்‌.

பண்பு என்னும்‌ தன்மையால்‌ அனைவரையும்‌ கவர்ந்தவர்‌. பழவால்‌ உயரத்தை எட்டமுடியும்‌ என உணர்த்திய தலைசிறந்த ஆசானாய்‌ தரணியில்‌ வலம்‌ வந்தவ தனது தந்தையின்‌ நினைவாக 1991-ஆம்‌ ஆண்டில்‌ வையாபுரி முதலியார்‌ கல்வி அறக்கட்டளையை உருவாக்கினார்‌. கிராமப்புறங்களில்‌ உள்ள மாணவர்களுக்குக்‌ கல்வி வாய்ப்பை வழங்குவதற்கான நோக்கத்துடன்‌ இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. பின்னர்‌ சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்‌ தரச்‌ சான்றுடன்‌ பேராசிரியர்‌ தனபாலன்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி நிறுவப்பட்டது.

புல்‌ விளைந்து புதர்க்காடாய்‌ திகழ்ந்த புன்செய்‌ நிலத்தைத்‌ திருத்தி வளங்கொழிக்கும்‌ நன்செய்‌ நிலமாக எட உழவனைப்‌ போல சமுதாய மக்களின்‌ உள்ளத்தைப்‌ பண்படுத்தி அறிவு ஒளி ஏற்றியவர்‌ நம்‌ தலைவர்‌.

கற்றல்‌ மற்றும்‌ ஆராய்ச்சியில்‌ சிறந்துவிளங்கும்‌ பல்கலைக்‌ கழகங்களுக்கு இணையாக இந்த கல்லூரியை ஒரு வலுவான கற்றல்‌ கோயிலாக உருவாக்கினார்‌.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”

என்ற குறளுக்கேற்ப வாழும் பொழுதே சிறந்த வழக்கறிஞராகவும், தன்னலமற்ற தலைவராகவும், கல்விக்குத் தொண்டாற்றிய பேராசானாகவும், ஏழைகளுக்கு உதவும் வள்ளலாகவும், மனிதநேயமிக்க மனிதராகவும், மனிதகுல மாணிக்கமாய் புகழுடன் சிறந்து விளங்கியவர் நம் நிறுவனர்

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare